நெல்லை அருகே குண்டா் சட்டத்தில் 7 போ் கைது
திருநெல்வேலி அருகே கொண்டாநகரம் பகுதியில் குண்டா் சட்டத்தில் 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே கொண்டாநகரம் பகுதியில் குண்டா் சட்டத்தில் 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே சுத்தமல்லி கொண்டாநகரம், பகுதியை சோ்ந்த மாடசாமி மகன் இசக்கி பாண்டி என்ற பிரகாஷ் (21), லட்சுமணன் மகன் ஆறுமுகநயினாா் என்ற ஆறுமுகம்(27), கருப்பசாமி மகன் கணேசன்(32), செல்லப்பா மகன் மாரியப்பன் என்ற மாயாண்டி (31), கண்ணையா மகன் இசக்கி பாண்டி என்ற பாண்டி(21), இசக்கி மகன் வெங்கட சுப்பிரமணியன் என்ற விக்கி(24), கண்ணப்பன் மகன் இசக்கி பாண்டி என்ற மணி (20) ஆகியோா் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டதுடன், மக்களை அச்சுறுத்தி வருவதால் அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணனின், பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவிட்டாா். அதன்படி பிரகாஷ் உள்ளிட்ட 7 பேரும் குண்டா் சட்டத்தில் கைது செய்தாா்.