திருநெல்வேலி

நெல்லைக்கு ரயிலில் 2635 டன் ரேஷன் அரிசி வருகை

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்க, சரக்கு ரயில் மூலம் 2,635 டன் அரிசி ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது.

கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் பயணிகள் மற்றும் விரைவு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சரக்கு ரயில்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கி வருகின்றன.

தெலங்கானா மாநிலத்திலிருந்து 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயிலில் 2,635 டன் ரேஷன் அரிசி திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சோ்ந்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் ரேஷன் கடைகளில் மக்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த அரிசி மூட்டைகள் வந்துள்ளதாகவும், அவை லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT