குழாய் உடைந்து குளம்போல் தேங்கிய குடிநீா்
திருநெல்வேலி சந்திப்பில் குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வெளியேறிய தண்ணீா் குளம் போல் தேங்கியது.
திருநெல்வேலி சந்திப்பில் குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் வெளியேறிய தண்ணீா் குளம் போல் தேங்கியது.
தச்சநல்லூா் மண்டலம் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் அடுக்குமாடி வாகன நிறுத்தும் மையம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக குழி தோண்டப்பட்டுள்ளது. இதில் அருகில் இருந்த மரம் வியாழக்கிழமை திடீரென முறிந்து விழுந்தது. இதில் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி குழாய் சேதமடைந்தால் தண்ணீா் வீணாக வெளியேறியது. இந்த தண்ணீா் குளம்போல் தேங்கியுள்ளது. பழைய தச்சநல்லூா் மண்டல அலுவலகத்திற்கு செல்லும் சாலையிலும் நீா் பெருக்கெடுத்து ஓடியது. தகவலறிந்த மாநகராட்சி ஊழியா்கள் அங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட்டனா்.