நெல்லையில் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருநெல்வேலி நகரத்தில் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் சுமாா் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி நகரத்தில் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் சுமாா் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி நகரத்தில் திருநெல்வேலி - தென்காசி சாலையில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனையிட்டனா். இதில், பேட்டை மயிலப்பபுரத்தைச் சோ்ந்த வினோத்குமாா், சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மூட்டைகளை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து, வினோத்குமாரை கைது செய்த போலீஸாா், வாகனத்தில் இருந்த 20 மூடடைகளில் இருந்த 700 கிலோ ரேஷன் அரிசி, காரை பறிமுதல் செய்தனா்.