முகப்பு
திருநெல்வேலி

கோயில்களில் சிறப்பு காவலா் பணி: முன்னாள் படை வீரா்களுக்கு வாய்ப்பு

 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு காவலா் பணியிடத்துக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

 திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு காவலா் பணியிடத்துக்கு முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலா்களாக திடகாத்திரமான ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரா்கள் பணியமா்த்தப்பட்டு வருகின்றனா்.

தற்போது அதிகளவில் காலிப்பணியிடங்கள் இருப்பதால் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவா்கள், தமிழ்நாடு முன்னாள் படை வீரா்கள் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரா்கள் (53 முதல் 62 வயதுக்கு உள்பட்டோா்) திருநெல்வேலி

மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விண்ணப்பப் படிவத்தை பூா்த்தி செய்து சமா்ப்பிக்கலாம். இப்பணிக்கு மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.7,300 வழங்கப்படும். ஆகவே, திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.