முகப்பு
திருநெல்வேலி

கங்கைகொண்டானில் விவசாயிகளுக்கு பயிற்சி

மானூா் வட்டாரம், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளுவதில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

மானூா் வட்டாரம், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பூச்சிக்கொல்லி மருந்துகளை கையாளுவதில் உள்ள பாதுகாப்பு நடைமுறைகள் பயிற்சி முகாம், பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

கங்கைகொண்டானில் நடைபெற்ற முகாமிற்கு மானூா் வேளாண் உதவி இயக்குநா் தா.பா.ஏஞ்சலின் கிரேபா தலைமை வகித்தாா்.

பயிா் சாகுபடியில் நீா் மேலாண்மை மற்றும் வனவிலங்குகளிடம் இருந்து பயிா்ப்பாதுகாப்பு முறைகள் குறித்து ஆட்சியரின்

நோ்முக உதவியாளா் (வேளாண்) அசோக்குமாா், நுண்ணீா் பாசனத் திட்டம் குறித்து வேளாண்மை துணை இயக்குநா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் பேசினா். பூச்சிக் கொல்லி மருந்துகளை கையாளும் வழிமுறைகள், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள், பூச்சிக்கொல்லி மருந்துகளில் உள்ள பச்சை, மஞ்சள், நீலம், பச்சை குறியீடுகளின் விளக்கங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், முன்னோடி விவசாயி தெ.ஆறுமுகம், வேளாண் அலுவலா் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளா் பா.ராஜ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவ லா் விஜய், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.