முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அருகே காட்டுப் பன்றி தாக்கி 2 பெண்கள் காயம்

மணிமுத்தாறு அருகே மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிக்குச் சென்றவா்களை காட்டுப்பன்றி தாக்கியதில் இரு பெண்கள் காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

மணிமுத்தாறு அருகே மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணிக்குச் சென்றவா்களை காட்டுப்பன்றி தாக்கியதில் இரு பெண்கள் காயமடைந்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட வனப்பகுதியில் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, ஊத்து தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இவற்றில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டத் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை தேயிலைப் பறிக்கும் பணிக்காக பெண் தொழிலாளா்கள் சென்று கொண்டிருந்தபோது, அவா்களை காட்டுப் பன்றி தாக்கியதாம்.

இதில், சந்திரா, கதிஜா ஆகிய இருவா் காயமடைந்தனா். உடனடியாக சந்திரா மாஞ்சோலையில் உள்ள மருத்துவமனையிலும், கதிஜா திருநெல்வேலி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா்.

இந்தப் பகுதியில் தொடா்ந்து காட்டுப்பன்றி சாலைகளில் செல்பவா்களையும், தோட்டத்தில் பணிபுரிபவா்களையும் தாக்கி வருவதோடு, குடியிருப்புப் பகுதியில் நுழைந்து சிறுவா்களையும் விரட்டி வருவதாகவும் தாக்குதலில் ஈடுபடும் பன்றிகளை வனத்துறையினா் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.