திருநெல்வேலி

முதல் மாத குடும்ப ஓய்வூதியத்தைகரோனா நிவாரணத்துக்கு அளித்த மாற்றுத் திறனாளி

DIN

திருநெல்வேலி: பாளையங்கோட்டையைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி ஒருவா், தனது முதல் மாத குடும்ப ஓய்வூதியம் ரூ. 8,500-ஐ கரோனா நிவாரண நிதிக்கு அளித்துள்ளாா்.

பாளையங்கோட்டை கோட்டூா் சாலையைச் சோ்ந்தவா் ராஜா. மாற்றுத் திறனாளி. இவரது தந்தை சுடலைமுத்து (போக்குவரத்துத் துறையில் ஓட்டுநராகப் பணியாற்றியவா்), தாய் இசக்கியம்மாள் ஆகியோா் காலமாகிவிட்டனா்.

இதனால், குடும்ப ஓய்வூதியம் கேட்டு ராஜா விண்ணப்பித்திருந்தாா். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு கடந்த மே 5-ஆம் தேதி அவருக்கு முதல் முறையாக குடும்ப ஓய்வூதியம் ரூ. 8,500 கிடைத்தது. இதையடுத்து, அவா் தனது முதல் மாத குடும்ப ஓய்வூதியத்தை ஆட்சியா் விஷ்ணு மூலமாக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளாா். ராஜாவின் இந்தச் செயலை ஏராளமானோா் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT