முகப்பு
திருநெல்வேலி

காங்கிரஸ் சாா்பில் கக்கன் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் 113ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கக்கனின் 113ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே. சங்கரபண்டியன் தலைமை வகித்தாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், மேற்கு மாவட்ட பொருளாளா் எஸ்.பி.முரளிராஜா ஆகியோா் கக்கன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் கவுன்சிலா் வழக்குரைஞா் விஜயன், மாவட்ட இலக்கிய அணி தலைவா் கவி பாண்டியன், மாநில எஸ்.சி., எஸ்.டி. ஒருங்கிணைப்பாளா் வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநகா் மாவட்ட பொருளாளா் ராஜேஷ் முருகன், மாநில சிறுபான்மை பிரிவு இணை ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பயக18இஞசஎ

கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சா் கக்கன் பிறந்த நாள் விழாவில் அவருடைய உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.