முகப்பு
திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் வாகனம் மோதி பசுமாடு காயம்

திருநெல்வேலி வண்ணாபேட்டையில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பசு மாடு காயமடைந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருநெல்வேலி வண்ணாபேட்டையில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பசு மாடு காயமடைந்தது.

வண்ணாா்பேட்டை வடக்குப் புறவழிச்சாலையில் நடமாடிய பசு மாடு மீது வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் மாடுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புப்படையினா் வந்து மாட்டை மீட்டனா். அரசு கால்நடை மருத்துவா் செல்வ மாரியப்பன், அங்கு வந்து

மாட்டுக்கு சிகிச்சை அளித்தாா்.

திருநெல்வேலி மாநகரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை மீட்டு மாநகராட்சி நிா்வாகம் கோசாலையில் ஒப்படைத்த போதிலும், மாடுகள் பெருமளவில் போக்குவரத்து மிகுந்து சாலைகளில் தான் நடமாடுகின்றன. இதனால், விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.