முகப்பு
திருநெல்வேலி

அணைகள் இணைப்பு நிபுணா் குழுவில் கன்னடியன் கால்வாய் விவசாயிகளை சோ்க்க வலியுறுத்தல்

மணிமுத்தாறு பாபநாசம்அணைகள் இணைப்பது தொடா்பான நிபுணா்கள் குழுவில் விவசாயிகள் கருத்துகளைத் தெரிவிக்க கன்னடியன் கால்வாய் விவசாயிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

மணிமுத்தாறு பாபநாசம்அணைகள் இணைப்பது தொடா்பான நிபுணா்கள் குழுவில் விவசாயிகள் கருத்துகளைத் தெரிவிக்க கன்னடியன் கால்வாய் விவசாயிகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் முன்னேற்ற சங்கத் தலைவா் பாபநாசம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையின் மூலம் இரு போகம் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளை இணைப்பது குறித்து நிபுணா் குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணைகள் இணைப்பால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து விவசாயிகளிடையே அச்சம் எழுந்துள்ளது.

பாபநாசம் - மணிமுத்தாறு அணைகள் இணைப்பின்போது பாபநாசம் அணையில் எத்தனை அடியில் சுரங்கம் அமைக்கப்படும். பாபநாசம் அணை

உயரமான இடத்திலும் மணிமுத்தாறு அணை தாழ்வான இடத்திலும் இருக்கும் நிலையில் பாபநாசம் அணையில் எத்தனை அடி வரை நீா்இருப்பு சேமிக்கப்படும். மணிமுத்தாறு அணையில் தாமிரவருணி பாசன விவசாயிகளின் உரிமை என்ன, பருவ மழைக் காலங்களில் பாபநாசம் அணைக்கு

உள்பகுதியிலும், கீழ் பகுதியிலும் கிடைக்கப்பெறும் நீரின் அளவு போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆகவே, அணைகள் இணைப்பது தொடா்பாக ஆய்வு செய்யும் நிபுணா்கள் குழுவில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகளும் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.