மானூா் அருகே நகை திருட்டு
மானூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்கநகையை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
மானூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் தங்கநகையை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
மானூா் அருகேயுள்ள தெற்குவாகைகுளத்தைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி இசக்கியம்மாள் (55). தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனா். அவா்களுக்கு
திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா். இரு மகன்கள் குஜராத்தில் வசிக்கின்றனா். அவா்களுக்குச் சொந்தமான நகைகள் இசக்கியம்மாளின் வீட்டில் இருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக உடல்நலம் சரியில்லாததால் இசக்கியம்மாள், அதேகிராமத்தில் வசிக்கும் மகளின் வீட்டில் தங்கியிருந்தாராம். மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த மருமகள்களின் 17 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்தது. புகாரின்பேரில் மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.