மணல் கடத்தல்: இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவந்திப்பட்டி உதவி காவல் ஆய்வாளா் சுடலைகண்ணு தலைமையில் போலீஸாா் சிவந்திபட்டி அருகேயுள்ள ஆதிபராசக்தி நகா் பகுதியில்
புதன்கிழமை இரவல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை சோதனையிட்டனா். அதில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்தியதாக, தூத்துக்குடி மாவட்டம் அய்யனாா்குளம்பட்டி பகுதியைச் சோ்ந்த பரமசிவன் (29), கொடிக்குளம் பகுதியைச் சோ்ந்த பூதத்தான் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.