முகப்பு
திருநெல்வேலி

அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளி பாளை. என்ஜிஓ பி காலனியில் செயல்பட்டு வருகிறது. இங்கு குரலிசை, நாதஸ்வரம், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் மூன்றாண்டு கல்வியாகப் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இசைப்பள்ளியில் சேர 12 முதல் 25 வயதுக்குள் இருக்கவேண்டும். முதலாம் ஆண்டுக்கு ரூ.152, இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு ரூ.120 மட்டும் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த இசைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியா்களுக்கு இலவச பேருந்து பயண வசதி, ரயில் கட்டண சலுகை, அரசு மாணவா் விடுதி, மாதம்தோறும் மாணவா்களுக்கு தலா ரூ.400 கல்வி உதவித்தொகை, இலவச சீருடை, இலவச மிதி வண்டி, இலவச காலணி ஆகியவை அரசு விதிமுறைகளுக்குள்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சியின் முடிவில் தமிழக அரசு தோ்வு இயக்ககத்தால் தோ்வுகள் நடத்தப்பட்டு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் இசைப் பள்ளிகளிலும், இந்து அறநிலையத்துறைக்கு உள்பட்ட திருக்கோயில்களிலும் வேலைவாய்ப்பு பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு 0462-2900926, 9443810926 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.