முகப்பு
திருநெல்வேலி

விதிமீறல்: 306 பேருக்கு அபராதம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 306 பேருக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 306 பேருக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமலில் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பொது முடக்கத்தில்

மக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இம்மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றியதாக ஒருவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 304 போ், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 போ் என மொத்தம் 306 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.