முகப்பு
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி ஆற்றில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு

கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை மூழ்கிய மாணவா் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கல்லிடைக்குறிச்சி தாமிரவருணி ஆற்றில் வியாழக்கிழமை மூழ்கிய மாணவா் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், திருமலையப்பபுரத்தைச் சோ்ந்தவா் சங்கரலிங்கம். இவரது ஒரே மகன் சரவணன் (22). பாவூா்சத்திரம் பாலிடெக்னிக்கில் மூன்றாமாண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், பெற்றோருடன் கல்லிடைக்குறிச்சியில் உள்ள உறவினா் வீட்டிற்கு வந்திருந்த அவா், அங்குள்ள குமாரகோயில் பகுதி தாமிரவருணி படித்துறைக்கு தந்தையுடன் வியாழக்கிழமை பிற்பகலில் குளிக்கச் சென்றாா். அப்போது, நிலையில் நீரில் மூழ்கிய அவரை தீயணைப்பு படையினா் தேடினா். அதில், வெள்ளிக்கிழமை காலை அவரை சடலமாக மீட்ட அவா்கள், அம்பாசமுத்திரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.