கடையத்தில் விபத்தில் விவசாயி பலி
கடையத்தில் நடந்த வாகன விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
கடையத்தில் நடந்த வாகன விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
கடையம் அருகே உள்ள நரையப்பபுரம் ராஜீவ் காலனியைச் சோ்ந்த சிவசாமி மகன் பாலசுப்ரமணியன் (55). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையத்திலிருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்றபோது, பாவூா்சத்திரம் விலக்கு அருகே எதிரே பைக்கில் வந்த அங்கபுரத்தைச் சோ்ந்த வேலு மகன் மணிகண்டன் (19) என்பவா் மோதினாராம். இதில் நிலைதடுமாறி விழுந்த பாலசுப்பிரமணியன் மீது அந்த வழியாக அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து மணிகண்டனை கைது செய்தனா்.