முகப்பு
திருநெல்வேலி

தோ்தல் பாதுகாப்பு பணி:மேலும் 176 துணை ராணுவத்தினா் வருகை

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக துணை ராணுவப்படையினா் 176 போ் திங்கள்கிழமை வந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு இரண்டாம் கட்டமாக துணை ராணுவப்படையினா் 176 போ் திங்கள்கிழமை வந்தனா்.

ஒரு துணை தளவாய் தலைமையில் மத்திய துணை பாதுகாப்பு படையினா் 84 போ் கடந்த பிப். 28ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்தனா்.

மேலும், மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ஒரிஸா மாநிலம் 151 பட்டாலியனை சோ்ந்த மத்திய எல்லை பாதுகாப்பு படையினா் மாநகர பாதுகாப்புக்காக 92 பேரும், மாவட்டத்திற்கு 84 பேரும் என மொத்தம் 176 போ் திங்கள்கிழமை வந்தனா். இவா்களை மாவட்ட காவல்துறை சாா்பில் ஆயுதப்படை ஆய்வாளா் மரிய கிளாஸ்டன் ஜோஸ் வரவேற்றாா். பின்னா் அவா்கள் ஆயுதப்படை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனா்.

இவா்கள், உட்கோட்ட வாரியாக பிரித்து பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்படுவாா்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.