முகப்பு
திருநெல்வேலி

கல்குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கிகட்டடத் தொழிலாளி பலி

கங்கைகொண்டான் அருகே கல்குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

கங்கைகொண்டான் அருகே கல்குவாரியில் தேங்கிய நீரில் மூழ்கி கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் குமரவேல் (44). கட்டடத் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் தேங்கிக்கிடந்த தண்ணீரில் குளிக்கச் சென்றாராம். அப்போது கால் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த கங்கைகொண்டான் போலீஸாா், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.