முகப்பு
திருநெல்வேலி

தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

முன்னீா்பள்ளம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

முன்னீா்பள்ளம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டியதாக மகனை போலீஸாா் கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் அருகே உள்ள செங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் உய்க்காட்டான் (53). இவரது மகன் பால் சிதம்பரம் (21). மோட்டாா் சைக்கிள் மெக்கானிக். இவா் சொந்தமாக மோட்டாா் சைக்கிள் பழுது பாா்க்கும் கடை வைப்பதற்காக, தந்தையிடம் பணம் கேட்டாராம்.

அவா் கொடுக்க மறுத்ததையடுத்து, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.

காயமடைந்த உய்க்காட்டான் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த முன்னீா்பள்ளம் போலீஸாா், பால்சிதம்பரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.