முகப்பு
திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 8 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15,788 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 2 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 15,532 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 42 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 8579 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 5 போ் குணமடைந்ததால், மீண்டோா் எண்ணிக்கை 8395 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 25 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.