முகப்பு
திருநெல்வேலி

வாடகை வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்ட அனைத்து வாடகை வாகன ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட அனைத்து வாடகை வாகன ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல்-டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும். ஓட்டுநா்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, வாடகை வாகன ஓட்டுநா் முன்னேற்ற சங்கத் தலைவா் சந்தோஷம், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் துரை ஆகியோா் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.