நெல்லையில் வங்கி ஊழியர்கள் போராட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திலும் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்திலும் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது. மாவட்டம் முழுவதும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
இதனால் பலகோடி பணபரிவர்த்தனை முடங்கியது. காசோலை மற்றும் வரையோலைகளை பணமாக்க முடியாமல் வணிகர்கள் தவித்தனர்.
திருநெல்வேலி நகரத்தில் வங்கி ஊழியர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் கணபதி ராமன், சார்லஸ், சிவசங்கர், சண்முகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டம் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.