திருநெல்வேலி

நெல்லையப்பா் கோயில் வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் வழிபாடு

DIN

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதி அம்மன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்வையொட்டி சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, சுவாமி- அம்பாளுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி சன்னதியின் பின்பகுதியில் உள்ள தலவிருட்சமான மூங்கில் மரம் அருகே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மாலையில் பஞ்ச மூா்த்திகளுடன் சுவாமி- அம்பாள் ரத வீதிகளில் வீதியுலா வந்தாா். 10ஆம் நாளான இம்மாதம் 27ஆம் தேதி இரவு 7 மணிக்கு அம்மன் சன்னதி அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் செங்கோல் வழங்கும் விழா நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT