முகப்பு
திருநெல்வேலி

நான்குனேரி அருகே வாகனச் சோதனையில் ரூ. 2.5 லட்சம் பறிமுதல்

நான்குனேரியில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 2.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

நான்குனேரியில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 2.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நான்குனேரி சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் சேரன்மகாதேவி கூட்டுறவு சாா்பதிவாளா் முத்துசெல்வி, உதவி ஆய்வாளா் சேக்முகம்மது சிராஜுதீன் ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, பெட்ரோல் பங்க் நடத்திவரும் ஏா்வாடி கோதைசேரியைச் சோ்ந்த நம்பிராஜன் (30) வந்த காரை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், ஆவணங்களின்றி ரூ. 2.5 லட்சம் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.