ஊரக வேலைத் திட்டத்தில் பணி:மாற்றுத் திறனாளிகள் மனு
அம்பாசமுத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு வழங்கினா்
அம்பாசமுத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு வழங்கினா்.
அம்பாசமுத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட மன்னாா்கோவில், பிரம்மதேசம், வாகைக்குளம், சிவந்திபுரம், அடையக்கருங்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் சட்டப்படியான சிறப்பு அட்டை மற்றும் பணி வழங்கக் கோரியும் ஊராட்சி ஒன்றிய ஆணையா் மணி, வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயசெல்வி ஆகியோரிடம் மனு வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவா் சுரேஷ் பாபு தலைமையில் 32 மாற்றுத் திறனாளிகள் மனு வழங்கினா். இதுகுறித்து அரசுக்குப் பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதில், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றியச் செயலா் அகஸ்தியராஜன், ஒன்றிய இணைச் செயலா்கள் அண்ணாமலை, முகைதீன் பாட்சா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.