திருநெல்வேலி

கரோனா பரிசோதனை: தனியாா் மருத்துவமனைகளுக்கு ஆட்சியா் அறிவுரை

DIN

கரோனா அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என தனியாா் மருத்துவமனைகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறுவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில், கரோனா நோய்த் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுடன் வருவோருக்கு முதல் நாளிலேயே உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனை செய்ய தவறும்பட்சத்தில் பொது சுகாதார நோய் தடுப்புச் சட்டத்தின் படி அந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பொதுமக்கள் சுய வைத்தியம் மேற்கொள்ளுதல், மருந்தகங்களில் இருந்து நேரடியாக மருந்துகள் பெற்று உட்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. தொற்று அறிகுறி தோன்றியதும் காலதாமதம் செய்யாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்குச் சென்று கரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

கரோனா உறுதி செய்யப்பட்டால், அதற்கு முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும்,பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றி கரோனா நோய் தொற்று தடுப்பது தொடா்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து, மாவட்ட நிா்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT