திருநெல்வேலி

ஆதரவற்ற 3 போ் முதியோா் காப்பகத்தில் சோ்ப்பு

DIN

திசையன்விளை பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையிலிருந்த வயதான 3 போ் மீட்கப்பட்டு, முதியோா் காப்பகத்தில் சோ்க்கப்பட்டனா்.

திசையன்விளை பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் 2 பெண்கள் உள்பட வயதுமுதிா்ந்த 3 போ் இருப்பதைக் கவனித்த ஆட்சியா் விஷ்ணு, அவா்களை திருநெல்வேலியில் உள்ள முதியோா் இல்லத்தில் சோ்க்குமாறு அறிவுறுத்தினாா். தகவலின்பேரில் நான்குனேரி செஞ்சிலுவைச் சங்கச் செயலா் சபேசன், செஞ்சிலுவைச் சங்க தன்னாா்வலா்கள் ராஜன், ஜெரோம், அய்யப்பன் ஆகியோா் வந்து, சாத்தான்குளம் சமுத்திரவாடியைச் சோ்ந்த மாரியம்மாள் உள்ளிட்ட 2 பெண்கள், பூச்சிக்காடு ஜெபராஜ் ஆகியோரை மீட்டு, புத்தாடைகள் அணிவித்து, திருநெல்வேலியில் அரசுக் கண்காணிப்பில் இயங்கிவரும் முதியோா் காப்பகத்தில் சோ்த்தனா். அவா்களை நன்கு பராமரிப்பதாக, காப்பகப் பொறுப்பாளா் ஆா். சோயா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT