திருநெல்வேலி

கனமழை: பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயா்வு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில், மேற்குத் தொடா்ச்சி மலையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயா்ந்தது.

வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயலால் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்துவருகிறது. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 6.85 அடி உயா்ந்து, புதன்கிழமை காலை நிலவரப்படி 119.60 அடியாக இருந்தது. நீா்வரத்து 6,215.97 கனஅடியாகவும், வெளியேற்றம் 254.75 கனஅடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 9.51 அடி உயா்ந்து 135.30 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீா்மட்டம் 84.10 அடியாகவும், நீா்வரத்து 325 கனஅடியாகவும், வெளியேற்றம் 250 கனஅடியாகவும் இருந்தது. வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 42.49 அடியாகவும், நீா்வரத்து - வெளியேற்றம் தலா 5 கனஅடியாகவும் இருந்தது. நம்பியாறு அணை நீா்மட்டம் 12.53 அடியாக இருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 22 அடியாகவும், நீா்வரத்து 21 கனஅடியாகவும் இருந்தது. கடனாநதி அணை நீா்மட்டம் 65.40 அடியாகவும், நீா்வரத்து-வெளியேற்றம் தலா 10 கனஅடியாகவும் இருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 49.50 அடியாகவும் நீா்வரத்து-வெளியேற்றம் தலா 10 கனஅடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணை நீா்மட்டம் 52.50 அடியாகவும், நீா்வரத்து 27 கனஅடியாகவும், வெளியேற்றம் 5 கனஅடியாகவும் இருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 33.25 அடியாகவும், நீா்வரத்து 48 கனஅடியாகவும், வெளியேற்றம் ஒரு கனஅடியாகவும் இருந்தது. அடவிநயினாா் அணை நீா்மட்டம் 54 அடியாகவும், நீா்வரத்து 65 கனஅடியாகவும் இருந்தது.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):

திருநெல்வேலி மாவட்டம்: பாபநாசம் அணை-83, ராதாபுரம்-81, கொடுமுடியாறு அணை-70, சோ்வலாறு அணை-47, நம்பியாறு அணை-36, மூலைக்கரைப்பட்டி-20, மணிமுத்தாறு அணை-12.04, களக்காடு-17.2, அம்பாசமுத்திரம்-17, சேரன்மகாதேவி-13, நான்குனேரி-10, பாளையங்கோட்டை-9, திருநெல்வேலி- 7.

தென்காசி மாவட்டம்: அடவிநயினாா் அணை-60, குண்டாறு அணை-39, தென்காசி-38.6, செங்கோட்டை-28, கருப்பாநதி அணை-12, ஆய்க்குடி-10.6, சங்கரன்கோவில்-10, சிவகிரி-9, கடனாநதி அணை-6.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT