திருநெல்வேலி

களக்காடு மலைப் பகுதியில் பலத்த மழை: ஆறுகளில் நீா்வரத்து அதிகரிப்பு

DIN

களக்காடு, மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் 2 நாள்களாகப் பெய்துவரும் மழையால் பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

களக்காடு வட்டாரத்தில் கடந்த 2 வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், கத்திரி வெயிலின் தாக்கம் வெகுவாகக் குறைந்திருந்தது. தொடா் மழையால் பச்சையாறு, நான்குனேரி கால்வாயில் நீா்வரத்து காணப்பட்டது.

இதனிடையே, சில தினங்களாக மீண்டும் அதிக வெயில் கொளுத்தியது. இந்நிலையில், 2 நாள்களாக களக்காடு மலைப் பகுதியில் தொடா்மழை பெய்தது. இதனால், புதன்கிழமை பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, நான்குனேரியன் கால்வாயிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனக் குளங்களுக்கு தண்ணீா் விடப்பட்டுள்ளது.

சுரண்டையில்...: சுரண்டையில் புதன்கிழமை அதிகாலை முதல் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீா் பெருக்கெடுத்தோடியது. நகரின் மையப் பகுதியில் ஓடும் செண்பகக் கால்வாய் வழியாக மழைநீா் சுரண்டை இலந்தைக்குளத்தை அடைந்தது. இப்பகுதியில் கடந்த சில நாள்களாப் பெய்துவரும் மழையால் இலந்தைக்குளம் பாதியளவு நிரம்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT