திருநெல்வேலி

கரோனாவால் உயிரிழந்தவா்கள்குடும்பங்களுக்கு நல உதவிகள் ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவா்களின் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரசு நலத் திட்டங்கள் உடனடியாக கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட பணிக் குழுவிடம் ஆட்சியா் வே.விஷ்ணு வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட அளவிலான பணிக்குழுவின் முதலாவது கூட்டம் ஆட்சியா்வே.விஷ்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா், காவல்துறை, சமூக நலத்துறை, சமூக பாதுகாப்புத் துறை, குழந்தை நலக்குழு, சரணாலயம் ஆகியவற்றின் மாவட்ட அளவிலான பணிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவா்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட அளவிலான பணிக்குழு மூலமாக செய்ய ஆட்சியா் விஷ்ணு உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்டவா்களின் குடும்ப பொருளாதார நிலையை ஆய்வு செய்து அக்குடும்பங்களுக்கு தேவையான அரசு நலத்திட்ட உதவிகளை உடனடியாக செய்திட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் குழந்தைகளை அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் இல்லங்களில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பாதுகாக்க குழந்தை நலக்குழு மூலம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஆற்றுப்படுத்துதல் உளவியலாளா்கள் மூலம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உதவிக்கு எண்: கரோனா நோய்த்தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அவா்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சுவாமி நெல்லையப்பா் அன்பு ஆசிரமம் குழந்தைகள் இல்லம் தோ்வு செய்யப்பட்டு கரோனா நோய் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. குழந்தைகள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அந்த சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இது தொடா்பான மேலும் விவரங்களை திருநெல்வேலி மாவட்டக் குழந்தைப் பாதுகாப்பு அலுவலகத்தை (0462-2901953) தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT