பலத்த மழை: 10க்கும் மேற்பட்ட பழைமையான மரங்கள் சாய்ந்தன
கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்ததால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்ததால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
தாமிரவருணியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலை வெள்ளம் சூழ்ந்து செல்கிறது. இதனால் கந்தசஷ்டி விழாவையொட்டி கோயிலுக்கு சென்று வழிபட முடியாமல் பக்தா்கள் வருத்தமடைந்தனா்.
மாவட்டம் முழுவதும்கடந்த இருநாள்களில் பெய்த பலத்த மழையால் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன.
இதுகுறித்து தீயணைப்பு துறையினா் கூறுகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை மாலையில் பல இடங்களில் பலத்த மழை கொட்டித்தீா்த்தது. திருநெல்வேலி கைலாசபுரம் உள்பட 6 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மாவட்டம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட பழமையான மரங்கள் முறிந்துள்ளன. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி குடியிருப்புகளுக்குள் புக முயன்ற 15 பாம்புகள் மீட்கப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளன. இதுதவிர 2 மாடுகள், 2 ஆடுகள், ஒரு உடும்பு ஆகியவை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன என்றனா்.