ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப எந்தத் தடையும் இல்லை: வங்கதேச அரசு
ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப எந்தத் தடையும் இல்லை என வங்கதேச அரசு தெரிவித்தது குறித்து...
ஐபிஎல் தொடரை ஒளிபரப்ப எந்தத் தடையும் இல்லை என வங்கதேச அரசு சனிக்கிழமை (மார்ச் 28) தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் 2025இல் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரருக்கான மினி ஏலம் நடத்தப்பட்டது. இதில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளரான முஸ்தஃபிசூர் ரஹ்மானை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வாங்கியது.
இதனிடையே, வங்கதேசத்தில் இந்து மதத்துக்கு எதிராக நிகழும் தாக்குதல்களைக் கண்டிக்கும் விதத்தில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்க பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பிசிசிஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்தக் கோரிக்கையை விடுத்தது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா அணியும் முஸ்தஃபிசூர் ரஹ்மானை விடுவித்தது. இதனைக் கண்டித்த வங்காள தேச கிரிக்கெட் வாரியம், வரும் டி20 உலகக் கோப்பையில் விளையாடப் போவதில்லை என்றும் ஐபில் போட்டியை ஒளிபரப்புவதை நாட்டில் தடைசெய்கிறோம் என்றும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இந்தத் தடையை நீக்குவதாக அறிவித்த வங்கதேச அரசு, “ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப எங்களிடம் எந்த நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை. நாங்கள் அரசியலை விளையாட்டுடன் கலக்க விரும்பவில்லை.
மேலும், நாங்கள் இதை ஒரு வணிகக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப ஏதேனும் ஒரு சேனல் விண்ணப்பித்தால், அதை நாங்கள் பரிசீலிப்போம்” என்றும் தெரிவித்தது.
The Bangladesh government said on Saturday (March 28) that there is no ban on broadcasting the IPL series.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.