வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா!
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற ஆஸ்திரேலியா குறித்து...
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை ஆஸ்திரேலியா 3-0 என வென்று முழுமையாகக் கைப்பற்றியது.
வங்கதேசத்துக்குச் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 1-2 என இழந்தது. இந்த நிலையில், டி20 தொடரை முழுமையாக வென்றுள்ளது.
சட்டோகிராமில் தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Advertisement
Advertisement
இந்த அணியில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹிருதாய் 61 ரன்கள் எடுத்தார். ரிஷாத் ஹைசைன் 16 ரன்கள் எடுக்க, மற்ற எட்டு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து அதிர்ச்சி அளித்தார்கள்.
ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்பென்சர் ஜான்சன் 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அடுத்து பேட்டிங் விளையாடிய ஆஸி. 11 ஓவர்களில் 112/3 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது.
இந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். பேட்டிங், பந்துவீச்சில் அசத்திய மாட் ரென்ஷா தொடர் நாயகனாகத் தேர்வானார்.
bangladesh series last match won by 7 wkts, Australia hit back hard 3-0 in the T20Is
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.