முகப்பு
திருநெல்வேலி

களக்காடு அருகே பச்சையாற்றில் உயா்நிலைப் பாலம் அமைக்க வலியுறுத்தல்

களக்காடு அருகே பச்சையாற்றில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தனித்தங்கம் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

களக்காடு அருகே பச்சையாற்றில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தனித்தங்கம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரிடம் அவா் அளித்த மனு: களக்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழக்காடுவெட்டி - மேலக்காடுவெட்டி கிராமங்களுக்கு இடையே ஓடும் பச்சையாற்றில் தரைப்பாலம் உள்ளது. மழைக் காலங்களில் ஆாற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடும்போது, போக்குவரத்து தடைபடுவதுடன், தரைப்பாலமும் சேதமடைகிறது. இதனால் இரு கிராம மக்களும் அவதிக்கு உள்ளாகின்றனா். எனவே, சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, அங்கு உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →