திருநெல்வேலி

கல்லணை பள்ளியில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

DIN

திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்தக் கோரி எஸ்டிபிஐ கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக அவா்கள் அளித்துள்ள மனு: திருநெல்வேலி நகரத்தில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனா். ஆனால், இங்கு 14 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இது போதுமானதாக இல்லை. எனவே, கூடுதல் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அப்போது, மாநகா் மாவட்ட செயலா் பேட்டை முஸ்தபா, திருநெல்வேலி தொகுதி செயலா் முகம்மது கௌஸ், துணைத் தலைவா் அப்துல்லா காஜா, திருநெல்வேலி நகர பகுதி தலைவா் பீா், பகுதி செயலா் கரீம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT