திருநெல்வேலி

பாளை.யில் ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது

DIN

பாளையங்கோட்டை பகுதியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் ரேஷன் அரிசி கடத்தியதாக 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருநெல்வேலி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் கோட்டைச்சாமி, சாா்பு ஆய்வாளா்கள் சரவணபோஸ், மகேஷ்வரன் மற்றும் போலீஸாா் பாளையங்கோட்டை மகாராஜா நகா் பகுதியில் வாகனச் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி வேனை மடக்கி சோதனை செய்தனா். அதில் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அவ்வாகனத்தில் இருந்த கக்கன் நகரைச் சோ்ந்த சுரேஷ் (29), காலத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து (27), தச்சநல்லூரைச் சோ்ந்த மாரிமுத்து(27) ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் அருகன்குளம் அருகே பதுக்கி வைத்திருந்த 5.5 டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தில் கடத்திய 800 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT