முகப்பு
திருநெல்வேலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருநெல்வேலி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி அருகேயுள்ள கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் வெள்ளத்துரை (29). ஆட்டோ ஓட்டுநா்.

இவா் 12.3.2018இவ் தச்சநல்லூா் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவுக்குச் சென்றபோது, அங்கு, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாராம். புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வெள்ளத்துரையை 2019இல் ஜனவரி மாதம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

இவ்வழக்கினை விசாரித்த திருநெல்வேலி போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அன்புச் செல்வி, வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத்துரைக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 15ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜெபஜீவ ராஜா ஆஜரானாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.