சிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!
சிதம்பரம் தொகுதி வேட்பாளர் தமிமுன் அன்சாரி - உதய சூரியன் சின்னத்தில் போட்டி!
சிதம்பரம் தொகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி சிதம்பரம் தொகுதியில் மட்டுமே போட்டியிடும் என்று கூட்டணிப் பங்கீட்டுப் பேச்சில் உறுதியானது. இந்நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று (மார்ச் 28) மாலை வெளியிடப்பட்டது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயக கட்சி உள்பட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, எஸ்டிபிஐ ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அக்கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளனர். இதையடுத்து, வரும் பேரவைத் தேர்தலில் தமிமுன் அன்சாரியும் உதய சூரியன் சின்னத்தில் சிதம்பரத்தில் போட்டியிட உள்ளார்.
Advertisement
Advertisement
Tamimun Ansari to contest as MJK Party candidate from Chidambaram constituency
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.