திமுக ஆட்சியைவிட தவெக ஆட்சியில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் இருந்ததைவிட தவெக ஆட்சியில் குற்றச் சம்பங்கள் அதிகரித்திருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.
திமுக ஆட்சியில் இருந்ததைவிட தவெக ஆட்சியில் குற்றச் சம்பங்கள் அதிகரித்திருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் நன்கொடை சேகரிப்பு திட்டத்தை தொடங்கிவைத்த அவா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
கட்சியின் வளா்ச்சிக்காக இன்றிலிருந்து அடுத்த மூன்று மாதங்கள் நிதி திரட்ட உள்ளோம். ஏழைகள் மற்றும் தொழிலாளா்களை தவிா்த்து பெரிய வணிகா்கள், வசதி படைத்தவா்களிடம் நிதி பெற உள்ளோம்.
Advertisement
Advertisement
திமுக ஆட்சியைவிட தவெக ஆட்சியில் அதிக அளவு குற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
சட்டம்- ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால் அதற்கு முதல்வா் உரிய பதில் அளிக்காமல், திமுக மீது மட்டுமே குற்றம் சாட்டி திசை திருப்புவது ஆரோக்கியமானது அல்ல.
14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலைக்கு தலைமை செயலாளா் தடையாக இருப்பதாக தெரியவந்தால், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து கட்சியின் நன்கொடை சேகரிப்பு நிகழ்வை, தனது பங்களிப்பு தொகையை உண்டியலில் செலுத்தி தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, கட்சியின் ஒருங்கிணைந்த செயல்திட்ட குழு கூட்டமும் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.