FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மத்திய - மாநில உறவு: திமுக ஆட்சியில் அமைத்த குழுவை ரத்து செய்த தவெக அரசு! மு.க. ஸ்டாலின் கண்டனம்

மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை தவெக அரசு ரத்து செய்ததற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

28 வினாடிகள் முன்பு
மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

மத்திய - மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை தவெக அரசு ரத்து செய்ததற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய - மாநில உறவுகளைச் சீராய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக்குழுவை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கலைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு கடந்த 2026 பிப்ரவரியில் தனது முதல் அறிக்கையை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இந்நிலையில் இந்த குழு கலைக்கப்பட்டிருப்பதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"மாநில உரிமைகள் இல்லை, ஆனால் தியேட்டர் உரிமைகளுக்கு தவெக அரசு அனுமதி அளித்துள்ளது" என்ற விதத்தில் பதிவிட்டுள்ளார்.

Centre-State Relations: M.K. Stalin condemns TVK govt scraps committee set up during DMK regime

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.