FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளது குறித்து...

முதல்வர் விஜய் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப்படம்
பகிர்:

தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருப்பதாக திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை (நவ. 2) குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:

Advertisement

Advertisement

1) ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.

2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திரத்துக்குச் சென்றுவிட்டன.

முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த ‘வழிகாட்டுதல் தமிழ்நாடு’ என்ற அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் அகங்காரத்துக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக பின்நோக்கிச் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதல்வரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து காட்சி (ஷோ) காட்டக் கிளம்பிவிட்டார்” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

summary

DMK president and former Chief Minister M.K. Stalin alleged on Monday (Nov. 2) that the development of Tamil Nadu has been buried under the TVK regime.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments