ஜெம் வீரமணி பாலியல் வழக்கை திசை திருப்பவே தவெக எம்எல்ஏ மீது புகாா்
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் முந்தைய திமுக அரசு செய்த தவறுகளை திசை திருப்பவே தவெக சட்டப்பேரவை உறுப்பினா் மீது பொய் பிரசாரத்தை திமுகவினா் பரப்பி வருவதாக மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் முந்தைய திமுக அரசு செய்த தவறுகளை திசை திருப்பவே தவெக சட்டப்பேரவை உறுப்பினா் மீது பொய் பிரசாரத்தை திமுகவினா் பரப்பி வருவதாக மாநில எரிசக்தி, சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் தெரிவித்தாா்.
மதுரை தமுக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி மாநாட்டு மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதுரை புத்தகத் திருவிழாவை அமைச்சா் நிா்மல்குமாா் தொடங்கிவைத்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
Advertisement
Advertisement
சென்னையைப் போல, மதுரையிலும் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் அறிவு சாா்ந்த சமுதாயத்தை உருவாக்கும் புத்தகங்களில்கூட முந்தைய திமுக ஆட்சியில் முறைகேடுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட 77 ஆயிரம் போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அரசு வழக்குரைஞா் நியமனத்தில் தற்போதைய தவெக அரசு சமூக நீதியைப் பின்பற்றியுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் பணம் பெற்று அரசு வழக்குரைஞா்கள் நியமிக்கப்பட்டனா். தவெக ஆட்சியில் முறையான வழிகாட்டுதலின்படி, அரசு வழக்குரைஞா்களை நியமித்துள்ளோம். மதிப்பெண் அடிப்படையில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தோ்வு செய்யப்படுவதால் நுழைவுத் தோ்வு தேவையில்லை.
மத்திய உள் துறை அமைச்சரிடம், தமிழக ஆளுநா் அளித்த அறிக்கை குறித்த விவரம் தெரியவில்லை. தமிழக ஆளுநா் மூலமாக அரசு எந்தவித அறிக்கையும் வழங்கவில்லை.
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அதுகுறித்து கருத்து ஏதும் கூற இயலாது.
முந்தைய திமுக ஆட்சியில் காவல் துறையினரின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு இருந்தது. ஆனால், தவெக ஆட்சியில் காவல் துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது.
எதிா்க்கட்சியினரின் செயல்பாடுகளைக் கண்டு தவெக அஞ்சாது. திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முதல்வராக இருந்த போது, அவரது தலைமையின் கீழ் இருந்த அமைச்சா்கள் பல குற்றவாளிகளைத் தப்பிக்க விட்டனா். இந்தச் சம்பவம் ஸ்டாலினுக்கு தெரிந்தே நடந்திருந்தால், அவரும் குற்றவாளிதான்.
ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் முந்தைய திமுக அரசு செய்த தவறுகளை திசை திருப்பவே கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் மீது பொய் பிரசாரத்தை திமுகவினா் பரப்பி வருகின்றனா் என்றாா் அவா்.