ஜெம் வீரமணி வழக்கு: அரசு வழக்குரைஞா்கள் நியமனம்
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளா் வீரமணிக்கு எதிரான 7 போக்ஸோ வழக்குகளில் காவல்துறை தரப்பில் ஆஜராக 3 அரசு சிறப்பு வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளா் வீரமணிக்கு எதிரான 7 போக்ஸோ வழக்குகளில் காவல்துறை தரப்பில் ஆஜராக 3 அரசு சிறப்பு வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளா் வீரமணிக்கு எதிராக 7 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளா் கணேசன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்குகள் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் மற்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிறப்பு புலனாய்வுக் குழு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், ஜெம் வீரமணி தொடா்புடைய வழக்குகளில், சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஆஜராக அரசு சிறப்பு வழக்குரைஞா்களாக, கே.ஆா்.சங்கரன், எம்.சந்தியா,சுவாமி சுப்பிரமணியன்ஆகியோரை நியமித்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.