FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஜெம் வீரமணியை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

44 வினாடிகள் முன்பு
வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணியை 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதியளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளா் வீரமணி உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா். வீரமணிக்கு எதிரான வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், சென்னையைச் சோ்ந்த சிறுமியின் தாயாா் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட 2-ஆவது வழக்கில், கடந்த அக்.7-ஆம் தேதி கைது செய்யப்பட்ட வீரமணி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

2-ஆவதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வீரமணியை, 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு புலனாய்வுக் குழு போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.பத்மா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது என வீரமணி தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வீரமணியை 2 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டாா். மேலும், விசாரணை முடிந்து, வீரமணியை சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

தீா்ப்புக்காக ஒத்திவைப்பு: ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளா் வீரமணி விவகாரத்தில் முன்பிணை கோரி, எஸ்ஆா்எம்யு பொதுச் செயலா் கண்ணையாவின் மகனும், தொழிலதிபருமான பிரகாஷ் தாக்கல் செய்த மனு இதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், முன்பிணை கோரிய மனுவை தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதி எஸ்.பத்மா உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments