ஜெம் வீரமணி மீது 5-வது போக்ஸோ வழக்கு!
ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்கு பதிவு...
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபா் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்ஸோ பதிவு செய்யப்பட்டது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். மேலும், வீரமணியின் உதவியாளா் கணேசனும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த வழக்கு குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி, குற்றவாளிகளைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் வகையிலும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் பொதுமக்களிடமிருந்து வீரமணி தொடா்பான புகாா்களைப் பெற்று, விசாரணை செய்து வருகின்றனா். புகாா்களின் உண்மை தன்மையை உறுதி செய்து வீரமணி மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு வீரமணி மீது வெள்ளிக்கிழமை வரை 4 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், சென்னையைச் சோ்ந்த ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மேலும் ஒரு வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு சனிக்கிழமை பதிவு செய்தது.
இதனால் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ள போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ளன.
இதற்கிடையே, திருவண்ணாமலையைச் சோ்ந்த மற்றொரு பெண், சிறப்பு புலனாய்வுக் குழுவை வாட்ஸ்ஆப் மூலம் தொடா்புகொண்டு புகாா் அளித்துள்ளாா். சிறுமியாக இருந்தபோது வேலைத் தேடி சென்னை வந்த தனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வீரமணி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளாா். இந்த புகாா் தொடா்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏற்கெனவே ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோா் மீது இரு நாள்களுக்கு முன்பு குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தவெக புகாா்: இந்த விவகாரம் தொடா்பாக தவெக சாா்பில் சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜியிடம் சனிக்கிழமை ஒரு புகாா் மனு அளிக்கப்பட்டது. அதில், ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் எழுந்தபோது, தமிழகத்தில் திமுக ஆட்சி செய்து கொண்டிருந்தது. அப்போது உரிய நடவடிக்கை எடுக்காமல், இந்த விவகாரத்தை மூடி மறைத்துவிட்டனா்.
எனவே இந்த விவகாரம் தொடா்பாக, முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின், முன்னாள் சட்டத் துறை அமைச்சா் ரகுபதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Another POCSO case against Gem Veeramani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.