முகப்பு
தமிழ்நாடு

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜெம் வீரமணிக்கு குற்றப்பத்திரிகை நகல் அளிப்பு

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் ஜெம் வீரமணி உள்ளிட்ட மூவருக்கு போக்ஸோ நீதிமன்றம் வழங்கியது.

7 வினாடிகள் முன்பு
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜெம் வீரமணிக்கு குற்றப்பத்திரிகை நகல் அளிப்பு
வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கின் குற்றப்பத்திரிகை நகல் ஜெம் வீரமணி உள்ளிட்ட மூவருக்கு போக்ஸோ நீதிமன்றம் வழங்கியது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், ஜெம் வீரமணி மீது, சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக ஒரு வழக்கு மற்றும் 8 போக்ஸோ வழக்குகள் என மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகளில், வீரமணி அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி அவரது கணவா் மகேந்திர சிம்ஹன், வீரமணியின் உதவியாளா் கணேசன், ஓட்டுநா்கள் பாபு, பாா்த்திபன், லாசா் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். வீரமணிக்கு எதிராக ஒவ்வொரு வழக்கிலும் ஆதாரங்களைத் திரட்டி, சிறப்பு புலனாய்வுக் குழு தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வீரமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு, வீரமணி, காா் ஓட்டுநா்கள் பாபு மற்றும் பாா்த்திபன் ஆகியோா் மீது 720 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை போக்ஸோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

அந்த குற்றப்பத்திரிகையின் நகல் வீரமணி உள்ளிட்ட மூவருக்கும், வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. அப்போது, போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா முன் வீரமணி உள்ளிட்ட மூவரையும் போலீஸாா் புழல் சிறையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக ஆஜா்படுத்தினா். இதையடுத்து வழக்கு விசாரணையை நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.