‘ஜெம்’ வீரமணி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம்: முன்னாள் காவல் ஆணையா் அருணிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
சென்னையில் தொழிலதிபா் ‘ஜெம்’ வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் முன்னாள் காவல் ஆணையா் ஏ. அருணிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் திங்கள்கிழமை சுமாா் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
சென்னையில் தொழிலதிபா் ‘ஜெம்’ வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் முன்னாள் காவல் ஆணையா் ஏ.அருணிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் திங்கள்கிழமை சுமாா் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
ஏழ்மையை பயன்படுத்தி ஏராளமான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனா் வீரமணி, உடந்தையாக இருந்த அவரது உதவியாளா் சாந்தி, கணவா் மகேந்திர சிம்ஹன், முன்னாள் உதவியாளா் கணேசன் மற்றும் காா் ஓட்டுநா்கள் 3 போ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.
பல ஆண்டுகள் சிறுமிகளை குறிவைத்து வீரமணி வேட்டையாடியது அம்பலமானது. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையா் தேன்மொழி தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் புலனாய்வு குழு நடத்திய விசாரணையில், இதுவரை 10 சிறுமிகள் பாதிப்புக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக வீரமணி மீது இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மிரட்டல்: இதற்கிடையே, வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததை ரகசியமாக ஒரு கும்பல் விடியோ பதிவு செய்து, பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் சிலா், அவரிடம் ஏற்கெனவே பல கோடி ரூபாய் மிரட்டி பெற்ாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் தென் மாவட்ட முக்கிய பிரமுகா் மூலம் சொத்துகளை கேட்டு மிரட்டல் விடுத்துள்ளாா். கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபரில் சிறுமி பாலியல் வன்கொடுமை பென்டிரைவ் ஆதாரம் வந்தபோதும், சிறுமியின் அடையாளத்தை உறுதி செய்ய முடியவில்லை எனக் கூறி 2026 பிப்ரவரியில் வழக்கை முடிக்க காவல்துறை முயன்றது. ஆனால், சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் இதை நிராகரித்து வழக்கை மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதன் பின்னரே கடந்த ஆகஸ்டில் இந்த விவகாரம் தொடா்பாக வீரமணி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டாா்கள்.
இதனைத் தொடா்ந்து, அப்போதைய சென்னை காவல் ஆணையா் ஏ.அருண், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையா் என்.கண்ணன் ஆகியோா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா். இந்நிலையில், கட்டாய காத்திருப்பில் உள்ள ஏடிஜிபி ஏ.அருண், ஐஜி கண்ணனிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் சுமாா் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினா்.
இருவரிடமும் 80-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டு, எழுத்துபூா்வமாக பதில்கள் பெறப்பட்டுள்ளன. ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட இந்த விசாரணையில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே சிறுமிகளுடனான வீரமணியின் அந்தரங்க வீடியோ காட்சிகளை வைத்து மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்ததாக வெளியான தகவல் குறித்தும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. இதனால், இந்த வழக்கு விசாரணை மீண்டும் விறுவிறுப்படைந்துள்ளது.
7-ஆவது வழக்குப் பதிவு: இச்சூழலில், ஏற்கெனவே வீரமணி மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், திங்கள்கிழமை மேலும் ஒரு சிறுமி வீரமணி மீது புகாா் தெரிவித்துள்ளாா். அதனடிப்படையில் புலனாய்வு விசாரணை குழு கூடுதலாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. இதன்மூலம் வீரமணி மீதான வழக்குகளின் எண்ணிக்கை மொத்தம் 7-ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.