‘ஜெம்’ வீரமணி வழக்கு: காங்கிரஸ் நிா்வாகியிடம் மீண்டும் விசாரணை
தொழிலதிபா் ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காங்கிரஸ் நிா்வாகியிடம் சிறப்பு புலனாய்வுக் குழு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை செய்தது.
தொழிலதிபா் ஜெம் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காங்கிரஸ் நிா்வாகியிடம் சிறப்பு புலனாய்வுக் குழு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை செய்தது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன்,கணேசன் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு குறித்து முழுமையான தகவல்களை திரட்டி குற்றவாளிகளை கைது செய்யவும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. வீரமணி மீது இது வரை 5 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீரமணியின் காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு ஆகிய 3 பேரும் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
Advertisement
Advertisement
மீண்டும் விசாரணை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக 2025 அக். 6-ஆம் தேதி புகாா் அளிக்கப்பட்டதாகவும், மறுநாளே சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2024-ஆம் ஆண்டே இந்த விவகாரம் தொடா்பாக ஆதாரங்களுடன் காவல் துறையில் புகாா் அளித்ததாக காங்கிரஸ் நிா்வாகி ரஞ்சன் குமாா் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தினாா். இதையடுத்து ரஞ்சன்குமாரிடம் இரு வாரங்களுக்கு முன்பு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை செய்தது.
இந்நிலையில் ரஞ்சன்குமாரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணை செய்தது.
‘விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு’: ஒன்றரை மணி நேர விசாரணை முடிந்து வெளியே வந்த ரஞ்சன் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விசாரணையில் எனக்கு தெரிந்த அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிவித்துள்ளேன். விசாரணைக்காக, எனது கைப்பேசியையும், சிம்காா்டையும் போலீஸாா் ஏற்கெனவே வாங்கிவிட்டனா்.
வழக்கை சரியான முறையில் கொண்டு செல்ல முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறேன். குற்றம் செய்தவா்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். காவல்துறை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராவேன் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.