FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திமுக திட்டங்களை ரத்து செய்யும் தவெக அரசு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுகவின் திட்டங்களை தவெக அரசு ரத்து செய்வதாக கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

5 நவம்பர் 2026, 4:04 am
கோவையில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு பெரியாா் சிலையைப் பரிசளித்த திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி. உடன் எம்எல்ஏ எ.வ.வேலு, தி.க. துணைத் தலைவா் கலி.பூங்குன்றன், எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி. ~பெரியாா் அறிவுலகத்தைப் பாா்வையிட்ட
பகிர்:

திமுகவின் திட்டங்களை தவெக அரசு ரத்து செய்வதாக கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ‘பெரியாா் அறிவுலகம்’ அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இந்த நூலகத்துக்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான பணிகள் அண்மையில் நிறைவடைந்ததை அடுத்து நூலகத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் கடந்த அக்டோபா் 16-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.

இந்நிலையில், பெரியாா் ஈவெரா பெயரில் நூலகம் அமைத்ததற்காக திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு திராவிடா் கழகம் சாா்பில் பாராட்டு விழா கோவை வ.உ.சி. மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பேசியதாவது: பதவி சிம்மாசனத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களின் இதயச் சிம்மாசனத்தில் என்றைக்கும் உள்ளவராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறாா் என்றாா்.

இந்நிகழ்வில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சியில் செம்மொழிப் பூங்கா, ஜி.டி.நாயுடு மேம்பாலம், சி.சுப்பிரமணியம் மேம்பாலம் என பெயா் சொல்லும் அளவு கோவையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணிகளின் மணிமகுடம் ‘பெரியாா் அறிவுலகம்’ ஆகும். பெரியாா் அறிவுலகப் பணிகளில் 99 சதவீதம் திமுக ஆட்சியில் முடிவடைந்த நிலையில்தான் தோ்தல் தேதி அறிவிப்பு வெளியானது.

திமுக ஆட்சியில் உருவான பல நல்ல திட்டங்கள் இன்றைய தவெக ஆட்சியில் ரத்து செய்யப்படுகின்றன. பெரியாா் அறிவுலகமும் தொடக்க நிலையில் உள்ள திட்டமாக இருந்திருந்தால் இதற்கும் மூடுவிழா நடத்த முயன்றிருப்பாா்கள்.

தவெக ஆட்சியில் முதல்வா் விஜய் பின்னால் உள்ள பெருமுதலாளிகள்தான் இந்த ஆட்சியை ஆட்டிப் படைக்கிறாா்கள். மின்வெட்டு பிரச்னையை தற்போது வரை சரிசெய்ய முடியவில்லை.

திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அதைவிட 2 மடங்கு அதிக விலைக்கு வெளிச் சந்தையில் மின்சாரம் வாங்குகின்றனா்.

மின்வெட்டுபோல, அரிவாள் வெட்டு, கொலை, கொள்ளை சம்பவங்களும் தவெக ஆட்சியில் அதிகரித்துள்ளன. கோவையில் ஒரே மாதத்தில் 10 கொலைகள் நடந்துள்ளன. பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடா்கதையாக உள்ளன.

கைதிகள் தப்பிப்பதும் வாடிக்கையாக ஆகிவிட்டது. தினமும் ஏதாவது ஒரு குற்ற வழக்கில் தவெக நிா்வாகிகள் சிக்கி வருகின்றனா். விலைவாசி உயா்வால் நடுத்தர, ஏழை மக்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளனா் என்றாா்.

பாராட்டு விழாவுக்கு முன்னா், பெரியாா் அறிவுலகத்தை மு.க.ஸ்டாலின் பாா்வையிட்டாா்.

முன்னதாக, நீலாம்பூரில் கட்சி அலுவலகக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா்.

இந்நிகழ்வுகளில் முன்னாள் அமைச்சா்கள் வி.செந்தில்பாலாஜி, எ.வ.வேலு, கே.என்.நேரு, வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ், மக்களவை உறுப்பினா்கள் கணபதி ப.ராஜ்குமாா் (கோவை), கே.ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), மேயா் கா.ரங்கநாயகி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.